வாழ்க்கை என்பது

வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!

Tuesday, September 1, 2009

கமல் -உலகின் அழிவிற்கு காரணம் ஆவாரா?




கராணங்கள் :-















1.1978 ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள்
அந்த திரைப்படத்தில் கமல் பெண்களை கொலை செய்யும் ஒரு சீரியல் கில்லெர் கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.படம் வெளிவந்தது ஒரு ஆண்டுகளுக்கு பின்பு சைக்கோ ராமன் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் .அவர் பலரை கொடுரமான முறையில் கொலை செய்திருக்கிறார். குறிப்பாக பெண்களை.




2. 1988ம் ஆண்டு கமல் வேலை இல்லாத பட்டதாரியாக சத்யா திரைப்படத்தில் நடித்திருந்தார் .89-90களில் இந்தியா வேலை இல்லா
திண்டாட்டத்தினால் பல பிரச்சினைகளை சந்தித்தது



3.1992 ம் ஆண்டு அவரின் மாபெரும் வெற்றி படமான தேவர்மகன் வெளியானது.அது ஒரு கிராமம் சார்ந்த கதையம்சம் கொண்டபடம்.
அந்த படத்தில் சாதீய மோதல்கள் பற்றி சொல்லி இருந்தார். சரியாக
ஒரு வருடம் கழிந்து அதாவது 1993 ல் சாதீய மோதல்கள் அதிக அளவில்
தென் மாவட்டங்களில் நடைபெற்றன.



4.1996 ம் ஆண்டு நம் அனைவரும் அறிந்ததே அந்த வருடம்தான் பலர்
நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டனர்.பலர் தற்கொலைகூட செய்து
கொண்டனர் .1994 ம் ஆண்டு அதாவது சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் மகாநதி திரைப்படத்தில் இந்த விஷயத்தை அவர் சொல்லி இருந்தார்.(மக்கள் இதை உணர்ந்து இருந்தால் இந்த சம்பவம் நடைபெறாமல்
தடுத்து இருக்கலாம்).




5.2000 ம் ஆண்டு கமலின் ஹேராம் வெளிவந்தது அதில் ஹிந்து -முஸ்லிம்
பிரச்சினைகளை பற்றி சில காட்சிகளை எடுத்திருந்தார்.(இது வரலாற்று சம்பவம்தான்)சரியாக இரண்டு வருடம் கழித்து நடந்தது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்.



6.2003 ம் ஆண்டு கமலின் அன்பே சிவம் வெளியானது.இந்த திரைப்படத்தில்
அவரும் நடிகர் மாதவனும் பேசும் ஒரு காட்சியில் சுனாமி என்ற வார்த்தையை சொல்லியிருப்பார்.அந்த வார்த்தை அதிக மக்கள் அறிந்து இருக்கவில்லை.சரியாக 2004 ம் ஆண்டு சுனாமி தாக்கி உலக அளவில் மிகப்பெரிய உயிர் இழப்பும் பொருள் இழப்பும் ஏற்பட்டது



7
.2006 ம் ஆண்டு கமலின் வேட்டையாடு விளையாடு வெளியானது.அதில் அமுதன் &இளமாரன் என்ற இரு கதாபாத்திரங்கள் இருந்தன.இந்த இரு கதாபத்திரமும் தொடர் கொலைகாரர்களாக சித்தரிக்கப்பட்டு இருந்தன.
சரியாக மூன்று மாதத்திற்கு பிறகு டெல்லி நொய்டா வில் மொநிண்டேர் & சதீஷ் என்ற தொடர் கொலைகாரர்கள் கைது
செய்யப்பட்டனர் .





8.2008 ம் ஆண்டு கமலின் தசாவதாரம் வெளியானது .இதில் அவர் காற்றின் முலம் எளிதில் பரவக்கூடிய கொடிய கிருமி பற்றி குறிப்பிட்டு இருந்தார்.
அந்த திரைப்படத்தில் அவர் அந்த கொடிய கிருமியை அமெரிக்காவில் கண்டுபிடிப்பதாக கதை.
2009 இப்பொழுது உலகம் முழுவதும் பன்றி காய்ச்சல் பரவி உள்ளது
இந்த கிருமியும் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது .





நமோ நாராயணாயா...........


கொசுறு :
கமலுடன் நடித்த நடிகைகள் அந்த படத்துடன் அவர்களின் திரை பயணம் முடிந்துவிடுவதாக
எனக்கு தெரிகிறது ஒரு சிலர் தவிர (ஸ்ரீ தேவி,) கமலுடன் நடிக்காத ரோஜா ,நதியா ஆகியோர் நிறைய படங்கள் நடித்ததாக எனக்கு ஒரு நினைவு
உங்களுக்கு தெரிந்தவர்களை எனக்கு சொல்லுங்கள் .



இதில் பிழை ஏதும் இருப்பின் பின்னுட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.



கமல் ரசிகர்கள் மனம் புண்படும்படி இருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

9 comments:

Anonymous said...

Photo kkal aarumai..Mathapadi idhu rombaaaaaaa
palaya e-mail forward....
Krish

Anonymous said...

என்ன ! ! ! இந்திரா காந்திய சுட்டுடாங்களா??

தோழி said...

ha ha ha. ukkanthu yosippeengalo?

வாசிக்க மட்டும் said...

வாருங்கள் தோழி அவர்களே

இது ஆங்கிலத்தில் எனனக்கு வந்த மெயில் அதை ரசிகர்களுக்கு ஏற்றவாறு
வழங்கியுள்ளேன்.

கொசுறு என்னுடைய கண்டுபிடிப்பு ஆகும்

Anonymous said...

Ungal kandupiduppuku utharanam sonnal nalla irukkum.Ungha logic suganya,Vasunthara das,abirami ivangalukku match aaguthu.But sneha,jothika,simran,asin ivangallam?
Krish

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கிளப்புறாங்கையா பீதிய.. :))

சங்கரராம் said...

கமல் மீது உங்களுக்கு என்ன கோபம்

மு.இரா said...

வெட்டி வேலை

வாசிக்க மட்டும் said...

நான் சொல்லவந்தது கமலுடன் நடிக்கும் போது அவர்கள் நல்ல உச்சத்தில் இருப்பார்கள். அதன் பின் அவர்களின் மார்க்கெட் குறைய தொடங்கிவிடும் .

Post a Comment

எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்

விளையாட்ட பாத்துகோங்க